இனமத பேதங்களற்ற ஐக்கிய இலங்கைத் திருநாட்டை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இச் சித்திரைப் புத்தாண்டில் திடசங்கர்ப்பம் பூணுவோம். – கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்.

தமிழ் சிங்கள வேறுகாடுகளைக் கடந்து எல்லா மக்களும் இலங்கையில் ஒருமித்துக் கொண்டாடுகின்ற  இச்சித்திரை புத்தாண்டு தினத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மலர்ந்திருக்கின்ற இச் சித்திரை புத்தாண்டு தினத்தில் இன,மத பேதங்களைக் கடந்து புத்தாக்க சிந்தனையுடையவர்களாகவும் எதிர் காலத்தின் தேவைகளை உணர்ந்தவர்களாகவும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மலந்திருக்கின்ற இப் புத்தாண்டானது இலங்கை மக்களைப் பொறுத்த வரையில் முக்கியமான ஓர் புத்தாண்டாக நான் பார்க்கின்றேன். இந் நாட்டிற்கும் முக்கியமான ஓர் தருணமாக இது அமைந்திருக்கின்றது. ஏனென்றால் வடக்கில் [...]

இனமத பேதங்களற்ற ஐக்கிய இலங்கைத் திருநாட்டை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இச் சித்திரைப் புத்தாண்டில் திடசங்கர்ப்பம் பூணுவோம். – கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.(படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமும் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. இக் கூட்டங்களை முன்னிட்டு மட்டக்களப்பு நகரிலும் மாவட்ட செயலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட செயலகத்தினுள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட செயலகத்துக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் வெபர் விளையாட்டு மைதானத்திலும் வாடி வீட்டுக்கு முன்னாலுமே தரித்து வைக்க அனுமதிக்கப்பட்டன. செயலக மாநாட்டு மண்டபத்தினுள் கையடக்க தொலைபேசி கொண்டு செல்லவும் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. இக் கூட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் [...]

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.(படங்கள் இணைப்பு)

புதிய செய்திகள்

புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்-நோன்புப் பெருநாள் செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஸ்லிம்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்-நோன்புப் பெருநாள் செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கியம், சகிப்புத்தன்மை, சுபிட்சம் நிறைந்த புதியதோர் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை முஸ்லிம்களின் தொடர்ச்சியான பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களினால் பேருவகையுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சிய டைகிறேன். இஸ்லாமிய கலண்டரில் மேன்மைமிகு மாதமான ரமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் [...]

வாஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வர்த்தக கொள்கை மாநாட்டில் அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு இந்தியா எதிர்ப்பு - ஆனந்த் சர்மா.

வாஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வர்த்தக கொள்கை மாநாட்டில் அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு இந்தியா எதிர்ப்பு - ஆனந்த் சர்மா.

 
அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பினை அவுட்சோர்சிங் நடவடிக்கை வாயிலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதனால், அவுட்சோர்சிங் பணியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். ஒபாமாவின் மிரட்டலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெரிய  நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளை இந்தியா, [...]

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - கெஹலிய ரம்புக்வெல்ல.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - கெஹலிய ரம்புக்வெல்ல.

தற்போது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.
இச்சட்டம் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைப்படி மூன்றிலொரு பங்கும், ஏற்கனவே நடைமுறையிலிருந்த வட்டார முறைப்படி மூன்றிலிரண்டு பங்கும் என்ற வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடாத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் புதிதாக மேற்கொள்ளப்படவி ருக்கும் திருத்தத்திற்கு அமையவே எதிர்வரும் உள்ளூராட்சி [...]

எமது நாட்டின் அரசியல் சமூக சூழ்நிலைக்கு இம்மத தத்துவங்களும் வழிகாட்டுதல்களும் இன்றியமையாததாக இருக்கின்றது.-ஈதுல் பிதர் பண்டிகையின் வாழ்த்து செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

எமது நாட்டின் அரசியல் சமூக சூழ்நிலைக்கு இம்மத தத்துவங்களும் வழிகாட்டுதல்களும் இன்றியமையாததாக இருக்கின்றது.-ஈதுல் பிதர் பண்டிகையின் வாழ்த்து செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இஸ்லாமிய சகோதரர்களுக்கு புனிதமான ஈதுல் பிதர் பண்டிகையின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு மாத காலம் முழுவதும் இறை அச்சத்திற்காக நோன்பிருந்து தம்மை தூய்மை படுத்திக்கொண்டு கொண்டாடப்படும் இப்பண்டிகையானது. மனித வாழ்வியத்திற்கு தேவையான அடிப்படையான ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் கொண்டிருக்கின்றமை இதன் சிறப்பம்சமாக நான் காண்கின்றேன். பண்டிகைகள் வெறும் கொண்டாட்டங்களுக்கும் களியாட்டங்களுக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டவை அல்ல ஒவ்வொரு சமய பண்டிகைகளும் அச்சமயம் சார்ந்த சன்மார்க்க நெறிகளை பண்டிகையின் ஊடாகவும் பிற [...]

வெருகலம்பதி  முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்பம்.

வெருகலம்பதி முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்பம்.

கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆலயங்களுள் மிகப் புராதனமானதும் பிரசித்தி பெற்றதுமான ஆலயம் வெருகல்  முருகப் பெருமான் ஆலயமாகும். திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் அமையப்பெற்ற மிகப் பெரும் பழமை வாய்ந்த ஊரான வெருகலில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. 18 நாட்கள் மிகவும் விசேடமாக உற்சவங்கள் இடம்பெற்று இறுதி நாள் தீமிதித்தலுடன் தீர்த்தோற்சவமும் இடம்பெறும். எதிர்வருகின்ற 27.09.2010 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். இன்று நண்பகல் சுபநேரம் 12.05க்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. இக் [...]

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறி

கிழக்கு மாகாண சபையினால் கிழக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர்களுக்கு தொழில் பயிறசிகளை வழங்கும் முகமாக பல்வேறு திட்டங்களை அறிமுகஞ் செய்யப்பட்ட வருகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சுந்திரகாந்தன் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறியினை வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளார். முதற்கட்டமாக திருகோணமலை குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிலிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு முதற்கட்டமாக பயிற்கள் வழங்குவதற்கான நெறியினை ஆரம்பித்து வைத்தார். இன்று (08.09.2010) மட்டக்களப்பு மாவட்டத்தின் [...]

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு,கிணறு இல்லாதோருக்கு மாகாண அமைச்சு உதவி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு,கிணறு இல்லாதோருக்கு மாகாண அமைச்சு உதவி.

கிழக்கு மாகாணத்தில்  வீடு, கிணறு இல்லாதோருக்கு வீடுகள், கிணறுகள் அமைத்துக் கொடுக்கும் முயற்சியினை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசணம் மற்றும் கிராமிய மின்சார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.  முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் வீடுகள் கிணறுகள் இல்லாதோருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு மாகாண அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இன்று(08.09.2010) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு மாகாண அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே தலைமையில் இடம்பெற்றது. முதற்கட்டமாக 30பேருக்கு கிணறுகளும் 25பேருக்கு வீடுகளும் [...]

முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பிரபல திரைப்பட நடிகர் முரளி இன்று காலை சென்னையில் காலமானார். தமிழ்ப்படங்களில் நாயகனாக நடித்து வந்த முரளி (வயது 47), மாரடைப்புக் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.
இதயம்,புதுவசந்தம்,பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்துவந்தார்.
பூவிலங்கு படத்தின் மூலம் [...]

புலம்பெயர் தமிழர்களிடம் கோயில் கட்ட நிதி கேட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிழக்கு தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும். – கிழக்கு மாகாண முதலமைச்சர்.

புலம்பெயர் தமிழர்களிடம் கோயில் கட்ட நிதி கேட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிழக்கு தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும். – கிழக்கு மாகாண முதலமைச்சர்.

கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுதாவளை மகாவித்தியாலயத்தில் இன்று ( 07.09.2010)இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்நது குறிப்பிடுகையில், தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இவர்களால் எம் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைத்ததும் [...]

18வது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை-உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் அரசியலமைப்புக்கு அமைவானதென்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை யென்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எனினும் திருத்தச் சட்ட மூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று (07) பாராளுமன்ற த்தில் அறிவித்தார். பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் கூடிய போது கேள்வி நேரம் நிறைவடைந்ததும் சபாநாயகர் இந்த அறிவிப்பினைச் செய்தார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய சரத்துக்கள் எதுவும் 18 [...]