06.09.2015 - 22:39

கிழக்கில் தேசிய அரசின் செயல்பாடு தெளிவில்லாமல் உள்ளது  . கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  மேடைகளில் மாத்திரம் சமத்துவம், நல்லாட்சி, சமூக ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நிதி ஒதுக்கிடுதலில் மட்டும் பாரபட்சம் காட்டியுள்ளது வேதனையளிக்கின்றது. வவேகமுள்ள தமிழ் கல்வி அமைச்சர் இருந்தும் கடந்த கால கிழக்கு மாகாண ஆட்சியில் கல்விஇ; வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்பன சமமாகப் பங்கிட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் எல்லோரிடமும் பேசி தீர்மாணம் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு 208 மில்லியன் கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டு சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன ஆனால் இம்முறை அமெரிக்க நிறுவனம் வழங்கிய நிதியில் 430 மில்லியன்...

31.08.2015 - 00:08

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ குணசேகர தெரிவித்துள்ளார். ...

30.08.2015 - 23:00

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் இன்று ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை...

30.08.2015 - 22:52

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் கட்சித்தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் (30.08.2015)நடைபெற்றது இக்கூட்டத்தில் மட்டக்களப்பு,பட்டிருப்புத்தொகுதியின் கிராமமட்ட அமைப்பாளர்களும்,பிரதேச இனணப்பாளர்களும் கலந்து கொண்டனர்

30.08.2015 - 06:37

(இதற்குத்தான ஆசைப்பட்டாய் பாலககுபாரா?)இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...

செய்திகள்

29.08.2015 - 08:23
நிட்டம்புவ தபால் நிலையத்தில் மீட்கப்பட்ட போலி முத்திரைகள் அடங்கிய தபால் அட்டைகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா விசேட குற்ற தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். நிட்டம்புவ தபால் அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய 15 ரூபா பெறுமதியான தலா 3 முத்திரைகள் ஒட்டிய 513 தபால்...
27.08.2015 - 19:09
USA யின் நிதியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைக்கு $ 3,218,000 அமெரிக்க டொலர்கள் கிழக்கு மாகாணமுதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அவர்களின் பெருமுயற்சியால் பகிர்ந்தளிக்கப்பட்டடுள்ளன. இதில் ஒரேயொரு தமிழ்பாடசாலை மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிங்களப்பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள்:01. அட்டாளைச்சேனை அந்-நூர் மஹாவித்தியாலயம். 02....
27.08.2015 - 19:00
காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் இம்மாதம் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு கிளையினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாகவோ அல்லது வேறேதும் காலணங்களினாலோ காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே...
27.08.2015 - 18:57
இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா டிப்போ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் சாரதி மற்றும் கன்டெக்டர் மீது சில சந்தர்ப்பங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனினும் இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்...
27.08.2015 - 18:55
கூட்டமைப்பில் இருந்து தெரிவாகியுள்ள 96 பாராளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை தேர்தலில் தோற்றவர்கள் பாராளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் மூலம் தெரிவு...
25.08.2015 - 16:01
2007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக...
25.08.2015 - 16:00
கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேவின் சில்வா இரகசியப் பொலிஸாரிடம் சில கடத்தல்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என வாக்குமூலம் வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில்...
25.08.2015 - 15:58
புதிய அமைச்சின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகளை சில கட்டங்களாக நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளதாக, தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் குறித்த நிகழ்வு இடம்பெறும் எனத் தெரிகின்றது. அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து ஏற்பட்டுள்ள...
25.08.2015 - 15:57
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
23.08.2015 - 09:08
அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் நியமனங்களில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லையென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசியப் பட்டியல் ஊடாக ஒரேயொரு பெண் உறுப்பினரே பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். எனினும் கடந்த பாராளுமன்றத்...

Pages