சாரா­யத்­திற்கும் பணத்­திற்கும் அடி­மைப்­பட்ட சமூ­க­மாக தமி­ழர்கள் இருக்­கக்­கூ­டாது ஐ.ம.சு.கூ. மட்­டக்­க­ளப்பு வேட்­பாளர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன்

சாரா­யத்­திற்­கும், பணத்­திற்கும் அடி­மைப்­பட்ட சமூ­க­மாக தமி­ழர்கள் இருக்­கக்­கூ­டாது என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பின் தேர்தல் பிர­சாரக் கூட்டம் சித்­தாண்டி ஞான­ஒளி விளை­யாட்டு மைதா­னத்தில் அண்­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் பொரு­ளாளர் ஆறு­முகம் தேவ­ராஜன் தலை­மையில் நடை­பெற்ற இந்­த­கூட்­டத்தில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கை­யில்,
தமி­ழர்­களின் வாக்­கு­களை பணத்­தினைக் கொண்டும் சாராய போத்­தல்­களைக் கொண்டும் கப­ளீ­கரம் செய்ய நினைக்கும் அர­சியல் வாதி­க­ளுக்கு தமி­ழர்கள் முதலில் பாடம்­பு­கட்ட வேண்டும்.இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு தமி­ழர்கள் யாரும் வாக்குப் போடக் கூடாது. எமது தலை­மையில் இருக்­கின்ற தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சி என்­பது மக்­களை நேசிக்­கின்ற கட்­சி­யாகும். நாங்கள் மக்­க­ளுக்கு சாத்­தி­ய­மான விட­யங்­களை செய்து கொடுத்துக் கொண்டு இருக்­கின்றோம்.எனது முத­ல­மைச்சர் காலப் பகு­திக்குள் மக்­களின் தேவை­களை நிறைவு செய்து வைப்­பதில் கவனம் செலுத்தி வந்­துள்ளேன். கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்கள் ஆட்­சி­ய­மைப்­பது குறித்து நான் பல தடவை சம்­பந்தனுடன் பேசி­னேன். ஆனால் அவர் இதை­யெல்லாம் கணக்­கெ­டுக்­க­வில்லை. எனது அணி­யோடு இருக்­கின்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் சிங்­கள உறுப்­பி­னர்­க­ளுக்கும் நீங்கள் விரும்­பி­ய­வாறு அமைச்சர் பத­வியைக் கொடுத்து மாகாண சபையை நீங்­களே நடத்­துங்கள் என்று சம்­பந்தனின் கால­டிக்குப் போய் கெஞ்சிக் கேட்டோம். கிழக்­கிலே தமிழ் முத­ல­மைச்­சரைக் கொண்டு வரு­வதில் எங்­க­ளு­டைய ஆத­ரவு என்றும் இருக்­கி­றது என்று நான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்குத் தெளி­வாகச் சொன்னேன்.
நான் மாத்­தி­ர­மல்ல இனிய பார­தி­யையும், பிரி­யந்த பத்­தி­ர­ண­வையும் தருவேன் என்றும் சொன்னேன். ஆம் அப்­ப­டி­யென்றால் பேசுவோம் என்று சொன்­னார்கள். என்னைக் கொழும்­புக்கு வர­வ­ழைத்தும் எங்கள் அணி­யோடு பேசி­னார்கள். கிழக்கின் ஆட்­சியை முஸ்­லிம்­க­ளுடன் சேர்ந்து அமைக்­கும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­கின்­றாரே என்று அந்­நேரம் சம்­பந்தனிடம் சொன்னேன். ஜனா­தி­பதி அப்­படிச் சொல்­லி­யி­ருக்க மாட்­டாரே நான் இர­வு­தானே ஜனா­தி­ப­தி­யோடும் பிர­த­ம­ரோடும் பேசினேன் என்று சம்­பந்தன் என்­னிடம் அடித்துச் சொன்னார். ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் முஸ்­லிம்­க­ளோடு சேர்ந்து ஆட்­சி­ய­மைப்­பதை விரும்­பு­வதால் ஜனா­தி­ப­தியும் அத­னைத்தான் விரும்­பு­கின்றார் என்று இதனை நான் உறு­திப்­ப­டுத்தி சம்­பந்தனிடம் சொன்னேன். அவர் என் கருத்தை அக்­க­றை­யுடன் கேட்­ட­பா­டில்லை.
என்­றாலும் பர­வா­யில்லை என்று நினைத்து நாங்கள் மாகாண சபை­யி­லி­ருந்த எட்டுப் பேர் அணி சேர்ந்து சம்பந்தனின் கால­டிக்குச் சென்­றி­ருந்தோம்.
முத­ல­மைச்சர் பத­வி­யையும் அமைச்சர் பத­வி­யையும் நீங்­களே எடுத்துக் கொள்­ளுங்கள். எனது அணி­யோடு இருக்­கின்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் சிங்­கள உறுப்­பி­னர்­க­ளுக்கும் நீங்கள் விரும்­பி­ய­வாறு அமைச்சர் பத­வியைக் கொடுத்து மாகாண சபையை நீங்­களே நடத்­துங்கள் என்று அவ­ரது கால­டிக்குப் போய் கெஞ்சிக் கேட்டோம்.
ஆம் அப்­ப­டித்தான் செய்வோம் என்றார். ஆனால், அவ­ரது பேச்சில் உறு­திப்­பாடு இல்­லா­ததை அவ­ரி­டமே சுட்­டிக்­காட்­டிய பொழுது எங்­க­ளு­டைய தந்தை செல்­வாவின் வழி­யிலே வந்த நாங்கள் வாக்­கு­று­தி­ய­ளித்து விட்டு மாறு செய்­ப­வர்­க­ளல்ல. எழுத்­துக்­களில் எழுதி ஒப்­பந்தம் செய்து நம்­பிக்கை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை. பேசினால் அது உறு­தி­யான நம்­ப­க­மான பேச்­சுத்தான் என்று அப்­பொ­ழுது சம்­பந்தன் எங்­க­ளிடம் சொன்னார்.

நாங்­களும் அந்த மூத்த அர­சி­யல்­வா­தி­யான சம்­பந்தனின் வாக்­கு­று­தியை நம்­பினோம். ஆனால் கடை­சியில் கழுத்­த­றுத்து விட்டார். இறு­தியில் தமி­ழ­ருக்­கு­ரிய கிழக்கு முத­ல­மைச்சர் பத­வியை முஸ்­லிம்­க­ளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தமி­ழனை நடுத்­தெ­ரு­விலே விட்டு விட்டு இப்­பொ­ழுது வேடிக்கை பார்க்­கிறார் இந்த சம்பந்தன். அது போதாக்குறைக்கு இப்பொழுது தமிழனின் காலடிக்கு வந்து பழைய புராணம் பாடி மீண்டும் வாக்குப் பிச்சை கேட்கிறார் என்றார்.