எனக்கு வாக்களித்த மக்களை என் உயிர் உள்ளவரை கைவிடமாட்டேன் - சந்திரகாந்தன்.

 

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த மக்களை என் உயிர் உள்ளவரை பாதுகாத்து அவர்களின் எண்ணம் வெற்றி பெற என்றும் பாடுபடுவேன்.

அத்துடன் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உழைத்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றீட்டிய கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு மாவட்ட வளர்ச்சிக்கும் மக்களுக்கும் பணி ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

127 வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்தாலும் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்றும் இருப்பேன். ஐக்கிய தேசிய கட்சிகள் பெற்ற வாக்குகள் 32359. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 32232 ஆகும். வித்தியாசம் 127 வாக்குகள்.