வாக்குகள் எண்ணுவதில் முறைகேடு நடந்துள்ளது?- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாம் இடத்தில் இருந்தார் . 

வாக்குகள் எண்ணப்படுகின்றபோது அங்கே எமது வாக்கெண்ணும் முகவர்கள்மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சி.சந்திரகாந்தன் - 17919 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இணையத்தள செய்திகளிலும் முகப்புத்தகத்திலும் சி.சந்திரகாந்தன் - 11 919 வாக்குகளும் எம்.எல்.ஏம் ஹிஸ்புல்லா 16 593 வாக்குகளும் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இவ் விடயம் தொடர்பாக 18.08.2015 அன்று வாக்குகள் எண்ணும் போது முறைகேடுகள் நடைபெறுகின்றது எனவும் மீண்டும் எண்ணும்படியும் எமது வாக்கெண்ணும் முகவர்கள் எழுத்துமூலம் கோரியிருந்தனர்(ஆதாரம் இத்துடன் இணைப்பு)
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு நாம் கொண்டுவந்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் எமது கட்சி தீர்மானித்துள்ளது. விரைவில் எமது கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு கூடி முடிவுகள் எடுக்கப்படும்