வவுனியா இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா டிப்போ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் சாரதி மற்றும் கன்டெக்டர் மீது சில சந்தர்ப்பங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனினும் இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த போராட்டத்தால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்