இம்மாதம் 30ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம்

காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் இம்மாதம் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு கிளையினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாகவோ அல்லது வேறேதும் காலணங்களினாலோ காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை கண்டறிவதில் சிலவேளை காலதாமதம் ஏற்படலாம் என்பதனாலும் அவர்களின் குடும்பத்தினருக்கு சரியான பதில் ஒன்றை வழங்குவதற்கு முடியாமல் போகும் என்பதனாலும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரின் தேவைகள் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.