போலி முத்திரை ஒட்டி தபால் அனுப்ப முயன்றது யார்

நிட்டம்புவ தபால் நிலையத்தில் மீட்கப்பட்ட போலி முத்திரைகள் அடங்கிய தபால் அட்டைகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா விசேட குற்ற தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். நிட்டம்புவ தபால் அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய 15 ரூபா பெறுமதியான தலா 3 முத்திரைகள் ஒட்டிய 513 தபால் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அந்த தபால் அட்டைகளை தபால் நிலையத்திற்கு கொண்டுவந்தவர் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்றும் தபால் அட்டையில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் முகவரி உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.