சுசில், யாப்பா மீதான மனு வாபஸ்

ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப்பெறப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் விஸ்வ வர்ணபால ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் பதவியில் இருக்க முடியாது என உத்தரவு பிறப்பிக்கும்படி கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.