அஸ்பெஸ்டோஸ் சீட்டுகளுக்கு தடை

இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் சீட் (asbestos sheet) வகைகளை பயன்படுத்துவதற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடையுத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது. மேலும் அடுத்த வருடம் முதல் (2016.01.01) பொலித்தீன் பாவனைகள் தொடர்பிலும் கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.