மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 115 பணியாளர்கள் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களாக சென்ற 115 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இதன்படி 73 பெண்கள் மற்றும் 42 ஆண்கள், இன்று அதிகாலை நான்கு விமானங்களில் இவ்வாறு திரும்பி வந்துள்ளனர். இவர்கள் கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு பணியாளர்களாக சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதுவர் அலுவலகத்தில் இருந்து உரிய பாதுகாப்பு தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட 56 பெண்கள் நேற்று நாட்டுக்கு திரும்பியுள்ளனர். வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலையீ்ட்டில் இவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.