கிழக்கில் நிதி ஒதுக்கிடுதலில் பாரபட்சம் - சி.சந்திரகாந்தன்

கிழக்கில் தேசிய அரசின் செயல்பாடு தெளிவில்லாமல் உள்ளது  . கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  மேடைகளில் மாத்திரம் சமத்துவம், நல்லாட்சி, சமூக ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நிதி ஒதுக்கிடுதலில் மட்டும் பாரபட்சம் காட்டியுள்ளது வேதனையளிக்கின்றது. வவேகமுள்ள தமிழ் கல்வி அமைச்சர் இருந்தும் கடந்த கால கிழக்கு மாகாண ஆட்சியில் கல்விஇ; வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்பன சமமாகப் பங்கிட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் எல்லோரிடமும் பேசி தீர்மாணம் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு 208 மில்லியன் கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டு சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன ஆனால் இம்முறை அமெரிக்க நிறுவனம் வழங்கிய நிதியில் 430 மில்லியன் ஒரு தமிழ் பாடசாலை தவிர 6 முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டள்ளன. இதில் முதலமைச்சர் எனது ஆட்சியில் முன்வைக்கப்படது என என்னைச் சாடியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரசுடன் தாங்கள் இணைந்து ஆட்சியமைத்திருப்பது சந்திரகாந்தனுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தனர். எதிர் காலத்தில் இத்தகைய செயல்கள் இடம்பெறாது தமிழ் அமைச்சர்களும் உறுப்பினர்களும் பாதுகாக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கண்டித்திருப்பது மகிழ்சியளிக்கின்றது இது ஜனநாயகம் மலர்ந்திருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

மாவடிஓடைப் பாலம் பொருளாதாரம் மற்றும் வாகனங்கள் இருந்தும் பூர்த்திடையாத நிலையில் உள்ளது. குறித்த பகுதிக்குரிய நீர்ப்பாசனப் பொறியியலாளரின் அசமந்தப் பொக்கை கண்டிக்கின்றேன்.

நல்லாட்சியில் கடந்த 15 ஆம் திகதி பாலத்தை திறக்கவேண்டும் என குறிக்கப்பட்டிருந்தும் வேலைகள் நடைபெறவில்லை. விரைவாக வேலைகளை முன்னெடுத்து வரும் டிசம்பர் மாதத்தில் மக்களின் பாவனைக்கு திறக்க வேண்டும்

திட்டமிடல், தூரநோக்கு, அரசியல் விழிப்புணர்வு என்பன வடமாகாணத்தைப்போல் கிழக்கிலும் ஜனநாயகம் இருக்க எல்லோரும் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்