நாடெங்கும் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த வருடத்தில் டெங்கு நோய் மோசமாகப் பரவியிருந்தது. டெங்கு நோய்க்குள்ளாகி கடந்த வருடம் மரணமடைந்தோரின் எண்ணிக்கை முந்நூறுக் கும் மேலானதாகும். அதேசமயம் கடந்த வருடத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முப்பத்து நாலாயிரத்தையும் தாண்டியிருந்தது.
கடந்த வருட இறுதியில் இந்நோயின் தாக்கம் சற்றுத் தணிந்தி ருந்த போதிலும், இவ்வருடம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தைந்து ஆகும். நோயினால் பீடிக்கப்பட்டோர் மூவாயிரத்தையும் [...]








